ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (07:59 IST)

பந்துவீச்சிலும் கெத்து காட்டிய பாகிஸ்தான்: இங்கிலாந்து 92/4

பந்துவீச்சிலும் கெத்து காட்டிய பாகிஸ்தான்: இங்கிலாந்து 92/4
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த ஐந்தாம் தேதி முதல் கிரிக்கெட் போட்டியில் மான்செஸ்டர் நகரில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. ஷான் மசூத் 156 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் ஷதாப் கான் 45 ரன்களும் எடுத்ததை அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய தொடங்கியது. அந்த அணி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது 2ஆம் நாள் முடியும் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
போப் மட்டுமே ஓரளவு நிலைத்து விளையாடிய 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் ரூட் உள்பட 4 முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது