திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (22:38 IST)

பழிக்கு பழிவாங்கிய இங்கிலாந்து: 38 ரன்களில் ஆல் அவுட் ஆன அயர்லாந்து

உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை வெறும் 85 ரன்களுக்குள் அயர்லாந்து அணி சுருட்டிய நிலையில், பழிக்குப்பழியாக இரண்டாவது இன்னிங்சில் அயர்லாந்து அணியை இங்கிலாந்து அணி 38 ரன்களில் சுருட்டியது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இந்தபோட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 85 ரன்களும் அயர்லாந்து அணி 278 ரன்கள் எடுத்தன
 
அதன் பின் இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்து விளையாடிய இங்கிலாந்து அணி 303 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 110 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி, வெறும் 38 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  அந்த அணியின் ஒரே ஒருவரை தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகியது பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது