செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (20:30 IST)

புனித பயணம் செய்வோர் ஓட்டகப் பாலை அருந்த வேண்டாம் ! இங்கிலாந்து அரசு வேண்டுகோள்

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா இருக்கிறது. ஆண்டு தோறும்  பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இங்கு வந்து தொழுகை செய்வதையே தங்கள் கடமையாகக் கொண்டுள்ளனர். 
இந்நிலையில் மக்காவுக்கு புனித பயணம் செல்லும் இங்கிலாந்து மக்கள் அங்குள்ள  ஒட்டகப் பாலை அருந்த வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கேட்டுகொண்டுள்ளது.
 
இந்த ஆண்டின் ஹஜ் பெருநாள் வரும்  ஆகஸ்ட் 9 முதல் 14 வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பல  லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் மெக்கா, ஆகிய நகரங்களுக்குச் செல்வது வழக்கம். 
 
இந்நிலையில்   மத்திய கிழக்கு நாடுகளில் விலங்குகளின் கறந்த பாலில் இருந்து மெர்ஸ் எனப்படும் புதிய வைரஸ் பரவுவதாக தகவல்கள் பரவி வருகிறது. எனவே சவுதி அரேபியாவுக்குச் செல்லுகின்ற  இங்கிலாந்து நாட்டு மக்கள் யாரும் அங்குள்ள  ஒட்டகப் பாலை பருகுவதை தவிர்க்க வேண்டும்என இங்கிலாந்து அரசு அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.