வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (14:25 IST)

4வது டெஸ்ட்: இங்கிலாந்து 400 ரன்களுக்கு ஆல் அவுட்!!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. 


 
 
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்திருந்தது.
 
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி  400 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 62 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா மற்றும் முரளி விஜய் களத்தில் உள்ளனர்.