வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2024 (13:19 IST)

சிராஜ் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணி ஆல்-அவுட்.. எத்தனை ரன்கள்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் எடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வந்த நிலையில் நேற்றைய இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது 
 
இந்த நிலையில் இன்று காலை இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளெவென விழுந்ததில்  இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் மட்டும் 153 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியை பொறுத்தவரை சிராஜ் 4 விக்கெட்டுக்களையும், குல்தீப், ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்களையும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் இந்த நிலையில் இந்தியா தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 
 
 
Edited by Mahendran