ஜாமீனில் வந்த திலீப் துபாய் செல்கிறாரா?
மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்பங்களுக்கு ஆளான வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் வெளிவரும்போது அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதோடு, அவருடைய பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது
இந்த நிலையில் இம்மாத இறுதியில் துபாயில் உள்ள தனது ஓட்டல் திறப்பு விழாவில் பங்கேற்க வசதியாக வெளிநாடு செல்ல அனுமதி வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில்ல் திலீப் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் திலீப் துபாய் செல்ல அனுமதி அளித்தது. அத்துடன் நான்கு நாட்களில் அவர் திரும்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முடக்கப்பட்ட அவரது பாஸ்போர்ட் 6 நாட்களுக்கு மட்டும் விடுவிடுக்கவும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நாளை அவரது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.