வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (14:54 IST)

போட்டிகளிலிருந்து விலகிய டு பிளிசிஸ்: தென்னாப்பரிக்காவை வழி நடத்த போவது யார்?

தென்னாப்பரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ், கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

 
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டு பிளிசிஸ் விளையாடும் போது அவருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் எளிதில் குணம் ஆகிவிடும் என கருதியவர் தான் அடுத்த போட்டியில் விளையாடுவதாக போட்டி முடிவில் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் காயத்தின் வீரியம் அதிகரித்துள்ளதால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் பர்ஹான் பெகர்தீன் என்ற மாற்று வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே காயம் காரணமாக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ் விலகியுள்ளது குறிப்பிடதக்கது. இரண்டாவது ஒருநாள் போட்டி நாளைக்கு நடைபெறவுள்ள நிலையில் யார் கேப்டன் என்பது தெரியவில்லை.