செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2017 (20:09 IST)

லேடி கபில் தேவ்: இந்திய பெண்கள் அணி கேப்டன் மித்தாலி ராஜ்-க்கு இது பொருந்துமா??

இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் நல்ல பேட்ஸ்மென் ஆகவும், நல்ல கேப்டனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். 


 
 
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்குக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தரும் வாய்ப்பு மித்தாலி ராஜ்-ன் கைகளில் உள்ளது. 
 
இந்தியா - இங்கிலாந்து இடையிலான மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 
 
உலக கோப்பைக்கும் லார்ட்ஸ் மைதானத்திற்கும், முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கும் தற்போது மித்தாலிக்கும் ஒரு முக்கிய தொடர்பு உள்ளது.
 
இந்த லார்ட்ஸ் மைதானத்தில்தான் 1983 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்றது. அப்போது அந்த கேப்டனாக இருந்தவர் கபில் தேவ். அதன் பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து தோனி உலக கோப்பையை மீண்டும் இந்திய அணியின் கைகளில் கொடுத்தார்.
 
இப்போது இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் இந்தியா - இங்கிலாந்து பெண்கள் இடையிலான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் கபிலுக்குப் பிறகு அதே மைதானத்தில் சாதனை படைத்த கேப்டன் என்ற பெயர் மித்தாலிக்கும் கிடைக்கும்.