1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (11:47 IST)

’அடி ஆத்தி’ - கும்ப்ளேவுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

முன்னாள் சுழல் பந்து வீச்சாளர், அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


 


இவரின் முதல் பயிற்சியிலேயே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இதை அடுத்து, பிசிசிஐ சார்பில், கும்ப்ளேவின் வங்கி கணக்கில் ரூ 6.25 கோடி சம்பளமாக செலுத்தப்பட்டது.

கும்ப்ளேவுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர்களில், கேரி கிரிஸ்டன் மற்றும் டங்கன் பிளட்சர் ஆகியோருக்கு அதிகபட்சமாக ரூ 3 கோடி முதல் 4 கோடி வரைதான் சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தலைமை பயிற்சியாளர் ஒருவர் வாங்கும் அதிகபட்ச ஊதியத்தில் ரவிசாஸ்திரியை அடுத்து,  அனில் கும்ப்ளே தான் இருக்கிறார்.