தோனியின் இடத்தை இவர் பிடித்து விடுவார்: கங்குலி நம்பிக்கை!!


Sugapriya Prakash|
ஹர்திக் பாண்டியா, ரகானே ஆகியோரை பாராட்டி பேசியுள்ள கங்குலி, தோனியின் இடத்தை பாண்டிய நிறப்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
 
இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் நிலையை பற்றி கங்குலி பேசியுள்ளார். அவர் கூறியதாவது,  கேப்டன் கோலி பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும், இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, ரகானே ஆகியோர் அணியின் தேவையின் போது தோள் கொடுத்தனர். 
 
குறிப்பாக பாண்டியாவின் திறமை இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம். அவர் பந்தை சிக்சருக்கும் அனுப்பும் விதம், எதிரிகளை நடுங்கவைக்கிறது. இந்த ஆட்டத்தை தொடர்ந்தால், விரைவில் தோனி இடத்தை பாண்டியா பிடித்துவிடுவார். 
 
ரகானே தொடர்ந்து சிறப்பான துவக்கம் அளித்தது சிறப்பான விஷயம். இவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக இப்படியே செயல்படுவது மிகவும் அவசியம் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :