1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (20:21 IST)

தோனி மகளுடன் நேரத்தை செலவிட்ட கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகள் ஸிவாவுடன் தற்போதைய கேப்டன் விராட் கோலி விளையாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 

 
இந்திய அணியில் வெற்றி கேப்டனாக வலம் வந்த தோனி ஒருசில காரணங்களால் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இருந்தும் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆனாலும் இன்னும் தோனி தல் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
 
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தோனி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தோனியின் மகள் ஸிவாவுடன் விலையாடியுள்ளார். அந்த வீடியோ காட்சியை கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்றும் கோலி போட்டியின் போது சற்று தடுமாறினால் தோனி அவருக்கு பக்க பலமாக நின்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறார். தோனி, கோலி இடையேயான உறவு மிகவும் ஆழமானது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.