1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:24 IST)

வலை பயிற்சியில் தடுமாற்றம்: தோனியின் ஃபார்ம் பற்றி கேள்வி??

இலங்கைக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டி தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணி. தற்போது தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


 
 
இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து 5 ஒரு நாள் போட்டிகளில் மோதவுள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
 
ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றுள்ள முன்னாள் கேப்டன் தோனியும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியின் தொடக்கத்தில் சில பந்துகளை சமாளிக்க முடியாமல் தோனி தடுமாறினார்.
 
ஆனால் அதற்கு பின்னர் பிறகு அடித்து விளையாடினார். தோனிக்கு சில இந்திய வேகப் பந்து வீச்சாளர்களும், சில லோக்கல் இலங்கை பந்து வீச்சாளர்களும் பந்து வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பயிற்சி முடிந்த பின்னர் தோனி நல்ல ஃபார்மில் உள்ளதாகவும், அவரது பங்களிப்பு திருப்தி அளித்துள்ளதாகவும் இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.