திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (17:35 IST)

சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கும் புது செயலி!

இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய செயலி ஒன்றை உருவாக்கும் முனைப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் மற்றும் விஐபி 2 ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்போது குடும்ப வாழ்க்கையில் இருக்கும் சௌந்தர்யா அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஹூட் என்ற செயலி நிறுவனத்தோடு சேர்ந்து புதிதாக டிவிட்டர் போல ஒரு செயலியை உருவாக்க உள்ளாராம். இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால் 58 வினாடிகளில் நாம் பகிர நினைக்கும் கருத்துகளை வாய்ஸாக  பகிர்ந்துகொள்ளும் விதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.