1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (13:53 IST)

கனவு அணியில் தோனிக்கு இடம் கொடுக்காத கங்குலி!!

ஐபிஎல் 10வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னால் கேப்டன் கங்குலி தனது ஐபிஎல் கனவு அணியை வெளியிட்டுள்ளார்.


 
 
கங்குலி வெளியிட்டுள்ள கனவு அணியில் விராட் கோலி, கம்பிர்  ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ், நிதிஷ் ராணா, மணிஸ் பாண்டே, ரிஷப் பந்த், சுனில் நரேன், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
ஆனால் இதில் அவர் தோனியை கணக்கில் எடுக்கவில்லை. அதே சமயம் சில வாரங்களுக்கு முன்னர் தோனி மிகச்சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் இல்லை என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.
 
ஒருவேளை இதனால் தான் தோனிக்கு தனது கனவு அணியில் கங்குலி இடம் கொடுக்கவில்லையோ என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
 
ஆனால், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்ன் வெளியிட்டுள்ள ஐபிஎல் கனவு அணியின் கேப்டன் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.