திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (18:07 IST)

கிரிக்கெட் சங்கத்துக்கு 1800 ரூபாய் பாக்கி வைத்திருக்கும் தோனி! மாணவர்கள் செய்த செயல்!

தோனி ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்துக்கு இன்னும் 1800 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்காக அவர் ஆயுள் சந்தாவாக 10000 ரூபாய் கட்டவேண்டும். அதையும் தோனி செலுத்திவிட்டார்.

ஆனால் அதற்கான ஜி எஸ் டி தொகையாக 1800 ரூபாயை செலுத்த தவறிவிட்டார். இந்நிலையில் தோனிக்காக இந்த தொகையை மாணவர்கள் பணம் சேர்த்து வரைவோலையாக கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அதை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஏற்க மறுத்துள்ளது.