தல இஸ் பேக்: மஞ்சள் ஜெர்சியில் சேப்பாக்கத்தை கலக்கிய தோனி!!

\
Sugapriya Prakash| Last Updated: சனி, 22 ஜூலை 2017 (20:15 IST)
தமிழ்நாடு பிரிமியம் லீக் கிரிக்கெட் தொடர் இன்று துவங்கியது. இதன் துவக்க விழா நிகழ்ச்சிகளில் தோனி கலந்துக்கொண்டார். 

 
 
யாரும் எதிர்பார விதமாக மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்திருந்தார் தோனி. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தோனி பூனே அணிக்காக விளையாடினார்.
 
இந்நிலையில் தடை காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் களத்தில் சிஎஸ்கே அணி தோனி தலைமையில் களமிறங்கும். இந்த இரண்டு ஆண்டுகள் சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகள் இல்லாமல் கலையிழந்து இருந்தது.
 
தமிழ்நாடு பிரிமியம் லீக் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால் மீண்டும் மைதானம் கலைகட்ட துவங்கியுள்ளது. அதுவும் தோனி நீண்ட நாட்களுக்கு பின்னர் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து மைதானத்திற்குள் வந்தது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. 
 


இதில் மேலும் படிக்கவும் :