செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (19:12 IST)

பிரபல நிறுவனத்தின் விளம்பரப் பிரதிநிதியாக தோனி நியமனம்

பிரபல நிறுவனத்தின் விளம்பர பிரதிநிதியாக தல தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் என்ற நிறுவனத்தின் விளம்பர நிதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
சென்னை கோவை உள்பட பல நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் பெங்களூரிலும் தனது பிசினசை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது
 
இதனை அடுத்து சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் நன்மதிப்பை பெற்ற தோனியை விளம்பர பிரதிநிதியாக நியமித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது