தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை! ரசிகர்கள் ஏமாற்றம்!
- 14 வது ஐபிஎல் தொடர் நடக்கும் தேதி அறிவிப்பு... சென்னையில் முதல் போட்டி ...
- #WhistlePodu : இணையத்தை கலக்கும் தோனியின் சென்னை வரவு!!
- ஐபிஎல் தொடருக்கு முன் பூம்ராவுக்கு டும் டும் டும்? சந்தேகத்தை எழுப்பிய அனுபமாவின் புகைப்படம்!
- ஐபிஎல் 2021: சென்னை வந்தடைந்த ‘தல’ தோனிக்கு உற்சாக வரவேற்பு
வலைப்பயிற்சியை வீடியோ எடுத்த ரசிகரின் ஐபோன் நொறுங்கியது: டிவில்லியர்ஸின் பவர்ஃபுல் ஷாட்!
வலைப்பயிற்சியை வீடியோ எடுத்த ரசிகரின் ஐபோன் நொறுங்கியது
2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது என்பதும் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே. அதேபோல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள புதிய மைதானத்தில் நடைபெற உள்ளது
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கு கொண்டுள்ள அணியின் வீரர்கள் அனைவரும் தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டிவிலியர்ஸ் தற்போது ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியில் விளையாட உள்ளார்
அவர் ஐபிஎல் போட்டிக்கு ஆயத்தம் ஆகும் வகையில் வலைப் பயிற்சியில் இன்று ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் டிவில்லியர்ஸ் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வதை ரசிகர் ஒருவர் ஆர்வமாக தனது ஐபோனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது டிவில்லியர்ஸ் அடித்த பவர்ஃபுல் ஷாட் ஒன்று அந்த ரசிகரின் ஐபோனை பதம் பார்த்ததால் ஐபோன் நொறுங்கியது இதனால் அந்த ரசிகர் அதிர்ச்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
