ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 மே 2023 (18:30 IST)

4 விக்கெட்டுகளை இழந்து திணறி வரும் டெல்லி.. 2 பந்துகளில் 2 விக்கெட் எடுத்த தீபக் சஹார்..!

Deepak Sahar
இன்று நடைபெற்று வரும் டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் 224 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் டெல்லி அணி 83 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

டெல்லியில் இன்று நடைபெற்று வரும் முக்கிய லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அபாரமாக விளையாடி மூன்று விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தன.

இதனை அடுத்து 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி தற்போது விளையாடி வரும் நிலையில் இரண்டாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் பிரத்விஷாவை  தேஷ்பாண்டே வீழ்த்தினார். இதனை அடுத்து சால்ட் மற்றும் ரூசோ ஆகியோர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் தீபக் சஹார் வீழ்த்தினார். இதனை அடுத்து ஜடேஜா துல் விக்கெட்டை வீழ்த்தியதை அடுத்து நான்கு விக்கெட்டை இழந்து டெல்லி அணி இலக்கை நோக்கி செல்ல முடியாமல் திணறி வருகிறது.

கேப்டன் டேவிட் வார்னர் மட்டுமே வெற்றியை நெருங்க போராடி வருகிறார் என்பதும் அவர் 54 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran