1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 மே 2023 (17:43 IST)

ருத்ராஜ், கான்வே அபார பேட்டிங்: டெல்லிக்கு 224 இலக்கு..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று முக்கிய போட்டி டெல்லிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடியதை அடுத்து டெல்லிக்கு 224 என்ற இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் அபாரமாக விளையாடிய 79 ரன்கள் அடித்தார். அதேபோல் கான்வே 87 ரன்கள் அடித்தார். 141 ரன்கள் சிஎஸ்கே எடுத்த போது தான் முதல் விக்கெட் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து 224 என்ற இமாலய இலக்கி நோக்கி டெல்லி அணி தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த அணி இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டதாகவே கருதப்படுகிறது
 
Edited by Mahendran