வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:26 IST)

127 ரன்களில் டெல்லியை சுருட்டிய கொல்கத்தா!

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் சிறப்பான பந்துவீச்சால் 127 ரன்களுக்கு டெல்லி அணியை சுருட்டியுள்ளது.

இன்று தொடங்கிய முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கே கே ஆர் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ஆஸி அணியின் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப் பட்டார்.

ஆரம்பம் முதலே சீரான் இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்திய வண்ணம் இருந்தது கொல்கத்தா அணி. இதனால் டெல்லி அணியால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் 39 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது டெல்லி அணியால்.