மகளிர் ஐபிஎல்: டெல்லி அணிக்கு 2வது வெற்றி..!
மகளிர் ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதின. இதில் டெல்லி அணி நேற்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் நான்கு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய டெல்லி அணியின் லேனிங் 70 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 212 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய உத்தர பிரதேச அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்ததால் டெல்லி அணையின் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உத்தரப்பிரதேச அணியின் ஹஹிலா மெக்ரத் 50 பந்துகளில் 90 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் மும்பை அணி அதே நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று குஜராத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva