1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:53 IST)

சிஎஸ்கே வெற்றி விழா கொண்டாட்ட தேதி அறிவிப்பு: முதல்வர் கலந்து கொள்கிறார்!

சிஎஸ்கே வெற்றி விழா கொண்டாட்ட தேதி அறிவிப்பு: முதல்வர் கலந்து கொள்கிறார்!
சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து வெற்றி கொண்டாட்ட விழா சென்னையில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
ஆனால் இடையில் உலக கோப்பை டி20 போட்டி நடைபெற்றது. இந்திய அணி உலக கோப்பை டி20 போட்டியில் இருந்து திரும்பியதும் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
சென்னை தமிழக தலைமைச் செயலகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் முதல்வரை சந்தித்து இதுகுறித்து அழைப்பிதழை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது