ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:50 IST)

தீபக் சஹார் முழுமையாக விலகல்: அதிகாரபூர்வமாக அறிவித்த சிஎஸ்கே

deepak
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் தீபக் சஹார் முழுமையாக விலகல் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 
காயம் காரணமாக தீபக் சஹார் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார்  என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னர் முழங்கால் காயத்தை அடுத்து முதுகிலும் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது