1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:11 IST)

பீஸ்ட் 16 காட்சிகள், ’கேஜிஎப் 2’ 26 காட்சிகள்: சென்னை ரோகிணியில் திடீர் மாற்றம்

beast kgf2
சென்னை ரோகிணியில் இன்று முதல் பீஸ்ட் காட்சிகள் குறைக்கப்பட்டன என்றும் ’கேஜிஎப் 2’ படத்திற்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏப்ரல் 13ஆம் தேதி பீஸ்ட் திரைப்படமும், 14ஆம் தேதி  ’கேஜிஎப் 2’ திரைப்படமும் வெளியானது
 
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் பீஸ்ட் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக தற்போது திரையரங்குகளில் பீஸ்ட் படத்திற்கு காட்சிகள் குறைந்து  ’கேஜிஎப் 2’ படத்திற்கு காட்சிகள் அதிகரித்து கொண்டே வருகிறது 
இந்த நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் இன்று முதல் பீஸ்ட் படத்திற்கு வெறும் 16 காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால்  ’கேஜிஎப் 2’ படத்திற்கு 26 காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன.