1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (21:32 IST)

குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!

gt vs csk
குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 29வது போட்டி இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது 
 
சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி 73 ரன்கள் எடுத்தார். அதேபோல் அம்பத்தி ராயுடு 43 ரன்கள் அடித்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது.
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் குஜராத் 170 என்ற இலக்கை நோக்கி குஜ்ராத் அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் இன்று வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும்
 
ஆனால் அதே நேரத்தில் சென்னை அணி வெற்றி பெற்றாலும் அதே ஒன்பதாவது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது