ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்றும் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 110.85 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94  என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உயர்வு காரணமாக ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விற்பனை கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
பெட்ரோல் விற்பனை 10 சதவீதமும் டீசல் விற்பனை 15% சரிந்து உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இரு சக்கர வாகனங்களுக்கு பதிலாக சைக்கிளை பயன்படுத்தும் அளவுக்கு மக்கள் வந்து விட்டதாக கூறப்படுகிறது