ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஏப்ரல் 2018 (17:26 IST)

சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்: முதல் வெற்றி யாருக்கு?

இன்று துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. 
சூதாட்ட புகாரில் சிக்கி இரண்டு வருடங்கள் கழித்து சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குகிறது. சென்னை - மும்பை இடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் 8 மணிக்கு நடைபெறவுள்ளது.  
 
இரு அணிகளுக்கும் இடையே ஒருவிதமான பகைமை உணர்வு இருப்பது அறியப்பட்டதே. இதுவரை இரு அணிகளும் 22 போட்டிகளில் மோதியுள்ளன.
 
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 10 முறை வென்றுள்ளது. எனவே வெற்றி விகிதத்தில் சென்னை அணியை மும்பை முந்தியுள்ளது. 
 
எனவே, இந்த போட்டி எப்படி இருக்கும் என ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வெற்றி, தோல்வி ஒருபுறம் இருந்தாலும், சிஎஸ்கே அணியை மீண்டும் ஐபிஎல் க்அளத்தில் பார்க்கவே ஆவலுடன் உள்ளனர்.