செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (10:11 IST)

தன்னை ஓரினச்சேர்க்கையாளராக அறிவித்த நியுசிலாந்து கிரிக்கெட் வீரர்!

நியுசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஹீத் டேவிஸ் தன்னை தன்பாலின ஈர்ப்பாளராக அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீதான பார்வை மாறி வருகிறது. பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது. இதையடுத்து பல பிரபலங்களும் தாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை தற்போது அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹீத் டேவிஸ் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “நான் என் வாழ்க்கையின் ஒரு பகுதியை மறைத்து வைத்திருப்பதாக உணர்ந்தேன். அதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினேன்” எனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் டேவிஸ் தன்னை ஒரு பால் ஈர்ப்பாளராக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.