வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (10:37 IST)

தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கொல்கத்தாவில் நடந்த அவமதிப்பு – கங்குலி & மம்தா மோதல் !

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடர் ரத்து செய்யப்பட்டதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருந்தது. தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் பீதி காரணமாக மொத்த தொடரும் கைவிடப்பட்டது.

இந்நிலையில் கொல்கததாவில் நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. போட்டி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு எந்தவித  அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால் இன்று கொல்கத்தா சென்ற தென் ஆப்ரிக்க அணி வீரர்களுக்கு, அங்குள்ள சிட்டி சென்டரில் அனுமதி மறுக்கப்பட்டது.  இது மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.