டி.என்.பி.எல் இறுதி போட்டி: சாம்பியன் ஆனது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!
டி.என்.பி.எல் இறுதி போட்டி: சாம்பியன் ஆனது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!
கடந்த சில மாதங்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது
இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தன. நாராயணன் ஜெகதீசன் மிக அபாரமாக விளையாடி 90 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் 184 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை பெற்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது