வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

நடிகை மீரா மிதுன் மீது பாய்கிறதா குண்டர் சட்டம்? பெரும் பரபரப்பு!

பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஒன்றை நடிகை மீரா மிதுன் வெளியிட்ட நிலையில் அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் கைது செய்யப்பட்டார்
 
இதனை அடுத்து அவர் நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட உடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
 
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் மீது மேலும் பல வழக்குகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்து காவல் துறை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
மீராமிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர் ஒருவருடத்திற்கு ஜாமீனில் கூட வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.