1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (10:45 IST)

27 ஆண்டுகளுக்குப் பின் பைனலில் இங்கிலாந்து – ஆஸியின் முதல் தோல்வி !

நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான உலக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரை இறுதிப் போட்டிகள் முடிந்து இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கிரிக்கெட்டின் பிறப்பிடமாக இருந்தாலும் அந்த அணி இன்னும் உலகக்கோப்பையை ருசித்ததில்லை. கடைசியாக் 1992 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தேர்ச்சி பெற்றதே அந்த அணியின் உச்சபட்ச சாதனை. அதன் பின் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இம்முறை அவர்கள் சொந்தமண்ணில் நடப்பதால் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகப் பார்க்கப்படுகிறது.

நியுசிலாந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இம்முறை பேட்டிங், பவுலிங் என அனைத்து விதத்திலும் பலமாக இருப்பதால் இங்கிலாந்துக்குக் கடுமையானப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல நேற்று தோற்று வெளியேறிய நடப்பு சாம்பியன் ஆஸி இதுவரை அரையிறுதியில் தோற்றதே இல்லை என்ற பெருமையை இழந்துள்ளது.