வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (11:49 IST)

விஜய் சங்கர் விலகல் – ராயுடுவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா ?

உலகக்கோப்பையில் இருந்து இந்திய ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் காயம் காரணமாக விலகியுள்ளது இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியாக அமைந்துள்ளது.

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கரின் முழங்கையில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுவதுமாகக் குணமடையாததால் அவர் உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தவான் விலகியுள்ள நிலையில் இப்போது விஜய் சங்கரும் விலகுவது இந்திய அணிக்கு மன ரீதியாக நெருக்கடியை அளித்துள்ளது.

இதையடுத்து விலகியுள்ள சங்கருக்குப் பதில் அணியில் யார் சேர்க்கப்படுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே ஸ்டாண்ட்பை அணியில் இருக்கும் அம்பாத்தி ராயுடு சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இப்போது மயங்க் அகர்வால் சேர்க்கப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.