சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது வேகப்பந்து வீச்சால் கலக்கிய பூமராவுக்கு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து பூம்ரா மொத்தமாக 157.1 ஒவர்கள் வீசி 21 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். இந்தியாவின் தொடர் வெற்றிக்கு புஜாராவுக்கு அடுத்தபடியாக முக்கியக் காரணமென்றால் அது பூம்ராதான். வேகப்பந்து வீச்சாளராக இத்தனை ஓவர்கள் வீசுவது அவருக்கு கண்டிப்பாக உடல் சோர்வைக் கொடுக்கும் என பிசிசிஐ கருதுகிறது.
இந்திய அணிக்கு அடுத்தபடியாக இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் மற்றும் உலகக்கோப்பைப் போட்டிகள் வர இருப்பதால், அந்தப் போட்டிகளுக்கு பூம்ராவை முழு உடல்தகுதியோடு வைத்திருக்கும் பொருட்டு ஆஸி யில் அடுத்து நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டிகள் மற்றும் நியுசிலாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் 20 ஒவர் போட்டித் தொடர்களில் ஓய்வு அளிக்கபட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் பந்துவீச்சின் பலம் குறைவதாக ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு நாள் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி
விராட் கோலி (கே), ரோஹித் ஷர்மா (து.கே), லோகேஷ் ராகுல். ஷிகார் தவான், அம்பாத்தி ராயுடு, தினேஷ் கார்த்தி, கேதார் ஜாதவ், தோனி (வி.கீ), ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யஷ்வேந்திர சஹால், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, முகமது ஷமி, முகமது சிராஜ்
நியுசிலாந்துக்கு எதிரான இந்திய அணி
விராட் கோலி (கே), ரோஹித் ஷர்மா (து.கே), லோகேஷ் ராகுல். ஷிகார் தவான், ரிஷப் பாண்ட்,, தினேஷ் கார்த்தி, கேதார் ஜாதவ், தோனி (வி.கீ), ஹர்திக் பாண்ட்யா, குருனால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யஷ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சிதார்த் கவுல்