திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (08:29 IST)

கமல், பிராவோ திடீர் சந்திப்பு பின்னணி என்ன ?

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை கிரிக்கெட் வீரர் பிராவோ நேற்று சந்தித்துப் பேசினார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டி ஜே பிராவோ சி எஸ் கே அணியில் விளையாடியதன் மூலம் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானவர். விடுமுறை நாட்களை சென்னையில் கழிப்பதையும் அவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார் அவர்.

தற்போது சென்னையில் இருக்கும் அவர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை நேரில் சென்று சந்தித்தார். இது சம்மந்தமான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவ சந்திப்பின் பின்னணி குறித்து விவாதிக்கப்பட்டது.

கமல்ஹாசன் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருப்பதால் மரியாதை நிமித்தமாக அவரை சென்று சந்தித்துள்ளார் பிராவோ. சந்திப்பின் போது தனது கையெழுத்திட்ட டி ஷர்ட்டை கமலுக்குப் பரிசளித்து அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.