1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (16:31 IST)

தடகளத்தையடுத்து கால்பந்து மீது மோகம் கொண்டுள்ள போல்ட்!!

தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள உசேன் போல்ட், அடுத்து கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். 


 
 
10 ஆண்டுகளுக்கு மேலாக ஜமைக்காவின் தடகளப் போட்டியாளர் உசேன் போல்ட் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சமீபத்தில் போல்ட் தனது ஓய்வை அறிவித்தார்.
 
தனது கடைசி போட்டியில், ஒரே ஒரு வெண்கலம் மட்டும் வென்றார். போல்ட் தற்போது கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். 
 
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக போல்ட் விளையாட உள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ள மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இவர் விளையாடுவார் என தெரிகிறது.