இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம் !
இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம் !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3000 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதி மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் என நான்கு மாநிலங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளது.
இப்பகுதியில் குறிப்பாக பழங்குடியினர் அதிமமாக வசிப்பதாகவும், இங்கு தங்கச் சுரங்கம் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், இந்த சுரங்கத்தில் 2 ஆயிரத்து 93 டன் தங்கம் இருப்பதாகவும் ஹார்தி என்ற பகுதியில் 646 கிலோ தங்கம் இருப்பதாகவும் உத்தரபிரதேச மாநில சுங்கத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சுரங்கத்திம் குறிப்பிட்ட படி தங்கம் இருந்தால், உலகில் அதிகளவு தங்கம் வைத்துள்ள அமெரிக்காவுக்கு (8 ஆயிரத்து 133 டன்) அடுத்து இந்தியா உலகில் இரண்டாவது நாடு என்ற பெருமை பெரும்.