தைரியம் இருந்தா வெளிய வந்து சொல்லி பார்! – பார்வையாளரிடம் சீறிய பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes
Prasanth Karthick| Last Modified சனி, 25 ஜனவரி 2020 (16:08 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் பார்வையாளர் ஒருவரை தகாத சொற்களால் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இதன் நான்காவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி பெவிலியனை விட்டு வெளியெறிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே நின்ற பார்வையாளர் ஒருவர் பென் ஸ்டோக்ஸை பார்த்து “உங்களை பார்த்தால் ஆங்கில பாடகர் எட் ஷீரன் போல உள்ளது” என்று கூறியிருக்கிறார். தோல்வியடைந்து வெளியேறிக் கொண்டிருந்த ஸ்டோக்ஸ் திடீரென அந்த பார்வையாளரை பார்த்து “தைரியம் இருந்தா இதை வெளிய வந்து சொல்லி பார்..” என தகாத வார்த்தைகளால் கத்தியிருக்கிறார்.

பார்வையாளரை பென் ஸ்டோக்ஸ் வசை மாரி பொழிந்த காட்சிகள் நேரலையில் பதிவாகிய நிலையில் சமூக வலைதளங்களிலும் பரவியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் பார்வையாளரை திட்டுவது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது என்பதால் அவர் மேல் ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :