அஷ்வினை தட்டி தூக்கிய ஜடேஜா: அதிரடி முன்னேற்றதுடன் தவான்!!
ஐசிசி சிறந்த டெஸ்ட் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தவான், ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஜடேஜா 897 புள்ளிகளுடனும், அஸ்வின் 849 புள்ளிகளுடனும் உள்ளனர். அதே போல், பேட்ஸ்மேன்கள் தர வரிசையில், தவான் 21 இடங்கள் முன்னேறி 39 வது இடம் பிடித்துள்ளார்.