திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (15:17 IST)

வங்கதேசம் 150 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 150 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்துள்ளது வங்கதேசம்.

இந்தியா – வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம் மிகவும் சுமாரான ஆட்டத்தையை தந்தது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சுகளை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் திணறினர்.

வங்கதேச கேப்டன் மொய்னுல் ஹக் 37 ரன்னும், ரஹீம் 43 ரன்களும் எடுத்ததே அதிகபட்ச ரன்களாகும். தொடக்க ஆட்டக்காரர்களான ஷட்மான் இஸ்லாம், இம்ருல் காயீஸ் ஆகியோர் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தது வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

58.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 150 ரன்கள் மட்டுமே பெற்றிருக்கிறது வங்கதேசம். இது இந்திய அணிக்கு மிகவும்  எளிதான இலக்காக இருக்கும் நிலையில் தற்போது இந்தியா பேட்டிங்கில் களம் இறங்கியுள்ளது.