250 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!

ashwin
Prasanth Karthick| Last Updated: வியாழன், 14 நவம்பர் 2019 (13:53 IST)
இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் தொடரில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் அஸ்வின்.

இந்தியா –வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்தியாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் திணறி வருகிறது.

இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் ஆளுக்கு தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த, ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் வங்கதேசம் 50 ஓவர்கள் தாண்டுவதற்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

தற்போது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரில் 250வது விக்கெட்டை வீழ்த்திய சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதற்கு முன்னால் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த சாதனையை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் அஸ்வின்.இதில் மேலும் படிக்கவும் :