வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (08:07 IST)

எதிரணியினருக்காக 70 ரன்களை வாரி வழங்கிய ஐதராபாத் அணி

நேற்றைய ஐதராபாத் - பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில், 4 ஓவரில் 70 ரன்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்தார் ஐதராபாத் அணிவீரர் பசில் தம்பி.
ஐபிஎல் போட்டியின் 51வது போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று மோதின. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து விலக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் பெங்களூரு அணி விளையாடியது. 
 
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் பசில் தம்பியின் ஓவரில் பெங்களூரு அணி வீரர்கள் 70 ரன்களை எடுத்து அசத்தினர். பசில் தம்பி எந்தெந்த ஓவரில் எவ்வளவு ரன்களை பெங்களூரு அணி வீரர்களுக்கு  வாரிக் கொடுத்தார் என்பதை பார்ப்போம்
 
பசிலின் 8 வது ஓவர்   -  19 ரன்கள் 
பசிலின் 12 வது ஓவர் -  18 ரன்கள்
பசிலின் 15 வது ஓவர் -  14 ரன்கள்
பசிலின் 19 வது ஓவர் -  19 ரன்கள்
என  பசில் தம்பியின் 4 ஓவரில் 70 ரன்களை குவித்தது பெங்களூரு அணி. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.