சச்சின், யூசுப் பதானைத் தொடர்ந்து தமிழக கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா!
சச்சின், யூசுப் பதானைத் தொடர்ந்து தமிழக கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா!
தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யூசுப் பதான் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் தொற்று ஏற்பட்டது என்பதும் இதுகுறித்து அவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தனர் என்பதும் தெரிந்ததே
சச்சின் மற்றும் யூசுப் ஆகிய இருவரும் தற்போது தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக வீரரான பத்ரிநாத் அவர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது பத்ரிநாத் இதுகுறித்து தனது ட்விட்டரில் நான் அனைத்து விதமான அத்தியாவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தேன், தொடர்ந்து பரிசோதனைகளும் செய்தேன். இருப்பினும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இருப்பினும் லேசான அறிகுறிகள்தான் என மருத்துவர்கள் கூறி உள்ளதால் நான் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது