திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (16:32 IST)

இந்த சாதனையை செய்யும் முதல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம்தான்!

நேற்று பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடியும் தோல்வியை சந்தித்தது.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி நேற்று மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை வென்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி பாபர் ஆசமின் அற்புதமான சதத்தால் 332 ரன்கள் சேர்த்தது. அவர் சிறப்பாக விளையாடி 158 ரன்கள் சேர்த்தார்.

ஒரு 150 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் ஆசம் மாறியுள்ளார். அதே போல 81 இன்னிங்ஸ்களில் 14 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.