1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (17:57 IST)

சி.எஸ்.கே அணியில் இணையவிரும்பும் இளையதலைமுறை பந்துவீச்சாளர்கள்!

சி.எஸ்.கே அணியில் இணையவிரும்பும் இளையதலைமுறை பந்துவீச்சாளர்கள்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளைய தலைமுறையை பந்துவீச்சாளர்கள் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காக விளையாட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியில் இணைய விரும்புவதாக சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல், சாஹல் ஆகியோர் பதிலளித்துள்ளனர் 
 
பெங்களூரு அணிக்கக அக்சர் படேல், டெல்லி அணிக்காக சாஹல் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி வீரர்கள் ஏலத்தின் போது இந்த இரு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்