ஒரு மாதத்துக்குப் பின் இந்தியா திரும்பிய மணிரத்னம் & குழு – தாய்லாந்து படப்பிடிப்பு ஓவர் !

Last Modified திங்கள், 13 ஜனவரி 2020 (08:24 IST)
இந்தியா சினிமா ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார் மணிரத்னம்.

மணிரத்னத்தின் கனவுத்திட்டமான கல்கியின் பொன்னியின் செல்வன்  நாவலை திரைப்படமாக்கும் முயற்சி பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கைகூடியுள்ளது. இந்தியாவின் பல மொழிகளின் திறமையான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இதையடுத்து நட்சத்திர பட்டாளத்தோடு தாய்லாந்தில் கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்பை நடத்தினார் மணிரத்னம்,

முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து படக்குழு இந்தியா திரும்பியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளதாக தெரிகிறது. அதற்கான திட்டமிடல் மற்றும் வி எஃப் எக்ஸ் காட்சிகள் சம்மந்தமான ஆலோசனை இப்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர்கள் அனைவரும் இந்த இடைவேளையில் தங்களின் வேறு வேலைகளைக் கவனிக்க உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :