கடைசி பந்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி !

Last Modified திங்கள், 25 பிப்ரவரி 2019 (04:46 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 126 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 50 ரன்களும், தோனி 29 ரன்களும், கேப்டன் கோஹ்லி 24 ரன்களும் எடுத்தனர்.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்க்ளில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது
கடைசி ஓவரில் 14 ரன்கள் ஆஸ்திரேலியா எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது யாதவ் பந்துவீச்சில் கம்மின்ஸ் இரண்டு பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தார்

மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாலர் நைல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :