மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று பிரிஸ்பன் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது இதனையடுத்து
179 என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
Edited by Mahendran