புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (07:49 IST)

ஆஸ்திரேலியாவும் தடுமாற்றம் – பவுலிங்கில் பதிலடி கொடுக்கும் இந்தியா !

ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய அணி 57 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா அஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா முன்வரிசை ஆட்டக்காரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் தடுமாறியது. ராகுல், விஜய், ரஹானே, கோலி ஆகியோரின் மோசமான ட்ரைவ் ஷாட் தேர்வுகளால் 40 ரன்களுக்கெ எல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் புஜாரா, ரோஹித் ஷர்மா, பண்ட் மற்றும் அஸ்வின் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நாகரீகமான ஸ்கோரை எட்டியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் சேர்த்தது. அற்புதமாக விளையாடிய புஜாரா சதமடித்தார். அவர் 123 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார்.

அதையடுத்து இன்று தனது இன்னிங்ஸை தொடங்கிய் இந்திய மேலும் ஒரு ரன் கூட சேர்க்காமல் தனது கடைசி விக்கெட்டை இழந்தது. அதையடுத்து தனது இன்னின்ஹ்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்சின் விக்கெட்டை இழந்தது. அதையடுத்து ஜோடி சேர்ந்த ஹாரிஸும் கவாஜாவும் நிதானமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். 26 ரன்கள் சேர்ந்த்திருந்த நிலையில் ஹாரிஸ்  அஸ்வின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளை வரை அந்த அணி 57 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. கவாஜா 21 ரன்களும் ஷான் மார்ஷ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.